ரஜினி - கமல், விஜய் - அஜித் என்று இருந்த தமிழ் சினிமாவில், தற்போது ரஜினிக்குப் பிறகு விஜய் தான் மாஸ் நடிகர் என்று கூறப்பட்டாலும், சில விஷயங்களில் ரஜினிகாந்தை விஜய் பின்னுக்கு தள்ளிவிடுகிறார்.
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், படத்தின் மீது இருந்த எதிர்ப்பார்ப்பால் படம் வெற்றிக்கரமாக ஓட்டிக்கொண்டிருக்கிறது. படத்தில் ஏகப்பட்ட அரசியல் வசனங்களும், அரசியல் நிகழ்வுகளை விமர்சிக்கும் காட்சிகளும் இருப்பதால், படம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த யு.ஏ.இ-ல் சர்கார் முதல் நாளே ரூ.6 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பாக ரஜினிகாந்தின் ‘கபாலி’ படம் தான் அங்கு முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக இருந்த நிலையில், தற்போது விஜயின் சர்கார் கபாலியின் சாதனை முறியடித்து நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.
இதன் மூலம் தளபதியாக இருந்த விஜய், தலைவராகிவிட்டதாக கூறி, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...