விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்த ஆர்.கே.சுரேஷ், ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாகி, விஜய், விக்ரம் ஆகியோரது படங்களில் வில்லனாக நடித்து வந்தவர், ‘பில்லா பாண்டி மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
முதல் படடத்திலேயே அஜித் ரசிகர் வேடத்தில் நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், நிஜத்திலும் தீவிர அஜித் ரசிகர் என்பதால், அவரது படத்தை ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார். அஜித் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்றாலும் அவர் புகழ்பாடும் ‘பில்லா பாண்டி’ யை அஜித் படமாகவே பாவித்து ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.
இந்நிலையில் பில்லா பாண்டி ஓடும் ஒரு திரையரங்கில் சரவெடி ஒன்றை வெடித்துள்ளனர். இதனால் படம் பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
இந்த நிகழ்வை சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், இந்த சம்பவத்திற்கு தனது வருத்தத்தை தெரிவித்ததோடு, இனி இதுபோல் செய்யாதீர்கள், என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...