Latest News :

'மெரினா புரட்சி' படத்துக்கு மீண்டும் தடை விதித்த மத்திய தணிக்கைக் குழு!
Thursday November-08 2018

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவான மெரினா புரட்சி படத்தைப் பார்த்த Censor Board Examination Committee எந்த காரணமும் சொல்லாமல் படத்தை Revising Committee க்கு அனுப்பினர்.

 

தற்போது படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான Revising Committee குழு எந்த காரணமும் சொல்லாமல் மீண்டும் தடை விதித்துள்ளனர்.

 

Indian Cinematograph Act 1983 விதியின்படி Revising Committee மறுப்பு தெரிவித்தால் FCAT எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு 2nd Revising Committee க்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.

 

காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது.

 

தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை  முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ் குழுவினர் உறுதியுடன் இருக்கிறோம்.

Related News

3714

’மாரீசன்’ படத்தின் டிரைலர் வெளியானது!
Tuesday July-15 2025

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்'  திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இப்போது சினிமா உண்மையிலேயே மிக மோசமாக இருக்கிறது - ஆர்.வி.உதயகுமார் கவலை
Tuesday July-15 2025

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...

சிம்புவின் சக்திவேல் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து தான் நடித்தேன் - நடிகர் டீஜே
Tuesday July-15 2025

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...

Recent Gallery