தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயந்தாராவுக்கு தென்னக சினிமா முழுவதும் கிரேஸ் இருந்தாலும், தமிழ் சினிமாவில் மட்டுமே அவர் ஈடுபாடு காட்டி வருகிறார். அதிலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவே அதிக விருப்பம் காட்டும் நயந்தாராவின், ஹீரோயின் சப்ஜக்ட் படங்கள் அனைத்தும் பெரிய வெற்றி பெறுவதால், அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்கள்.
இதனால், கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் நயந்தாரா, சமூக பிரச்சினைகளை பேசும் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
அதன்படி, நயந்தாராவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அறம்’ அவருக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக்க்கொடுத்தது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போராடும் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்த நயந்தாரா, அரசு எந்திரங்களை விமர்சிப்பது போன்ற காட்சிகளும், வசனங்களும் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், ‘அறம்’ இரண்டாம் பாகத்தில் நயந்தாரா நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதையும் கோபி நயினார் தான் இயக்குகிறார். இதில், கலெக்டர் பணியை ராஜினாமா செய்துவிட்டு மக்களுக்கான இயக்கம் ஒன்றை தொடங்கி நயந்தாரா போராடுவது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
தனது புதிய இயக்கத்தின் மூலம் மக்களுக்காக போராடும் நயந்தாரா, ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் கடுமையாக விமர்சிப்பது போல இப்படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, சர்கார் படத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நயந்தாராவின் இந்த படத்தை என்ன செய்வார்களோ!
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...