தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட மீ டூ விவகாரத்தில் முதலில் சிக்கிய கவிஞர் வைரமுத்து, பல்வேறு புகார்களை எதிர்கொண்டு வந்த நிலையில், மன அமைதிக்காக மதுரையில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தாராம்.
அப்போது, அவருக்கு உணவு ஒவ்வாமையினால் உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட வைரமுத்து சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், நேற்று அவருக்கு மீண்டும் உடல் நலம் சரியில்லாமல் போக உடனே சென்னை க்ரீம்ஸ் சாலை அப்பல்லோவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீண்டும் அவருக்கு உணவு ஒவ்வாமையினால் தான் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மீ டூ விவகாரத்தினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் வைரமுத்துவுக்கு தற்போது உடல் அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, அவருக்கு வந்திருக்கும் உணவு ஒவ்வாமை என்ற புது பிரச்சினையினாலும் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...