Latest News :

பிரஷாந்துக்கு வந்த பரிதாப நிலை! - அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் உள்ளே
Friday November-09 2018

90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்த பிரஷாந்த், மணிரத்னம், பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி என்று அத்தனை முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வந்ததோடு, பெரிய மார்க்கெட் உள்ள ஹீரோவாகவும் வலம் வந்தார். இவ்வளவு ஏன், அஜித், விஜய் ஆகியோரை விட பிரஷாந்த் தான்  சீனியர் நடிகர் மட்டும் இன்றி, வெற்றிப் பட ஹீரோவாகவும் இருந்தார்.

 

ஆனால், திடீரென்று பிரஷாந்தின் மார்க்கெட் பெரும் சரிவை சந்தித்தது. அப்படி இருந்தும் ‘ஜீன்ஸ்’ படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த பிரஷாந்த், ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தின் மூலம் மீண்டும் வெற்றி ஹீரோவாக வலம் வந்தாலும், ஒரு சில படங்களுக்குப் பிறகு அவரது படங்கள் அனைத்தும் தோல்விப் படங்களாகவே இருந்ததால், அவரது மார்க்கெட் சரிவை சந்தித்தது. இதற்கிடையே, திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினையால் துவண்டு போன பிரஷாந்த், நடிப்புக்கு சற்று பிரேக் கொடுத்தாலும், தனது தந்தையின் இயக்கத்தில் அவ்வபோது சில படங்களில் நடித்தாலும் அப்படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

 

தற்போது ‘ஜானி’ என்ற படத்தில் நடித்து வரும் பிரஷாந்த், தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்கிறார். ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் தெலுங்குப் படம் ஒன்றில் பிரஷாந்த் நடிப்பதாக தகவல் வெளியானதோடு, அப்படத்தில் பிரஷாந்த் தான் வில்லன் என்றும், அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும் கூறப்பட்டது.

 

ஆனால், தற்போது நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ஆம், ராம்சரணுக்கு நண்பர்களாக நான்கு பேர் வருகிறார்கள், அதில் ஒருவராக பிரஷாந்த் நடித்திருக்கிறார். 

 

இதை அறிந்த தமிழக ரசிகர்கள், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்த பிரஷாந்துக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா! என்று அதிர்ச்சியடைந்ததோடு, பெரும் கோபத்தோடு கமெண்ட் அடித்தும் வருகிறார்கள்.

 

இதோ அந்த கமெண்ட்,

 

 


Related News

3719

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery