ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் ஆளும் அதிமுக அரசு, அக்காட்சிகளை நீக்க வலியுறுத்தியதோடு, படத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையே, நேற்று முதல் சர்கார் ஓடும் திரையரங்கங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக தொண்டர்கள் விஜய் பேனர்களை கிழித்தெரிந்தனர். இதையடுத்து, தமிழகத்தின் சில திரையரங்கங்களில் சர்கார் காட்சி நேற்று நிறுத்தப்பட்டது.
மேலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யுமாறு அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவரை நேற்று இரவு போலீசார் கைது செய்ய முயற்சித்ததாக தயாரிப்பு தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால், காவல் துறை இதனை மறுத்தது.
இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸை நவம்பர் 27 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் கிடைத்தபிறகு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...