இந்தியா சார்பில் முதன் முதலாக பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற சுஷ்மிதா சென், பல இந்திப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ‘ரட்சகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர், பிறகு ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதோடு தமிழ் சினிமாவை ஏறக்கட்டினார்.
தற்போது 42 வயதாகும் சுஷ்மிதா சென், சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என்று பலருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும், இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரோமன் ஷால் என்ற 27 வயது இளைஞரை சுஷ்மிதா சென் காதலித்து வருகிறார். மாடலான அவருடன் சுஷ்மிதா சென் தாஜ்மஹாலுக்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, அதை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டார்.
சுஷ்மிதா சென்னுக்கும், ரோமனுக்கும் இடையே 16 வயது வித்தியாசம் இருந்தாலும், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களாம். இவர்களது திருமணத்திற்கு, சுஷ்மிதாவின் வளர்ப்பு மகள்களும் சம்மதம் தெரிவித்து விட்டார்களாம்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...