தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்த அனுஷ்கா ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ என்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்குப் பிறகு காணாமல் போய்விட்ட அளவுக்கு படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். காரணம், படங்களுக்காக தனது உடல் எடையை கூட்டியவர், மீண்டும் அதை குறைக்க முடியாமல் போனதால் தான்.
இதற்கிடையே, அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் என்றும், அவருக்கு மாப்பிள்ளை பார்க்க அவரது பெற்றோர் தொடங்கி விட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தனது உடல் எடையை குறைத்த பிறகு தான் புதுப்படங்களில் நடிப்பேன், என்று அனுஷ்கா அறிவித்ததோடு, தனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் விருப்பம் இல்லை, என்றும் கூறினார்.
இந்த நிலையில், அனுஷ்கா புது படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘சைலன்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக மாதவன் நடிக்கிறார்.
மாதவன் நடித்த ‘ரெண்டு’ படத்தின் மூலம் தான் அனுஷ்கா தமிழில் அறிமுகமானார். தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு ‘சைலன்ஸ்’ படம் மூலம் மாதவனும், அனுஷ்காவும் இணைகிறார்கள்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...