முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான ‘சர்கார்’ படத்தின் இடம்பெற்றிருக்கும் அரசியல் தொடர்பான சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆளும் அதிமுக அரசு, அந்த காட்சிகளை நீக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் சர்கார் படத்திற்காக தொடர் போராட்டங்கள் நடத்தி, விஜய் மற்றும் சர்கார் பட பேனர்களை கிழித்தனர். இதனால், சில திரையரங்கங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டதாக படத்தின் தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், பிரபல நடிகர் ரஞ்சித், ‘சர்கார்’ படத்தை பற்றியும் நடிகர் விஜய் பற்றியும் டிவி பேட்டி ஒன்றில் மோசமாக விமர்சித்திருக்கிறார்.
அதாவது, “ஓடாத படத்தை பேனர் கிழித்து ஓட வைக்க முயற்சிக்கிறார்கள்” என்று அவர் சர்கார் குறித்து கூறியிருக்கிறார். மேலும், தல அஜித்தை சந்தித்து தான் உள்ள கட்சியில் சேறுமாறு கேட்பேன், என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக-வில் இருந்த நடிகர் ரஞ்சித், தற்போது அக்கட்சியில் இருந்து தாவி பா.ம.க கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...