அஜித் - கூட்டணியில் உருவாகும் 4 வது படமான ‘விஸ்வாசம்’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வந்தது. இதில் ஒரு பாடலுக்கான சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வந்தனர். அஜித்துடன் குரூப் டான்ஸ்கர்கள் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென்று சரவணன் என்ற குரூப் டான்ஸர் மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சரவணனின் பிரதே பரிசோதனை செய்யப்பட்ட போது நடிகர் அஜித் மருத்துவமனையிலேயே இருந்து, சரவணனின் உடலை சென்னை கொண்டு வர தனது சொந்த பணத்தை செலவு செய்திருக்கிறார்.
டான்ஸர் சரவணனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...