தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரபல நடிகர் சரவணன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
’நந்தா’, ‘பருத்திவீரன்’, ‘கோலமாவு கோகிலா’, கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் சரவணன், சேலத்திற்கு சென்ற போது, அங்கு பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் காய்ச்சல் காரணமாக கடந்த 3 நாட்களாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணனுக்கு, ரத்த பரிசோதனை செய்த போது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. சேலத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சென்னை வந்த சரவணன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...