நாட்டில் இருக்கும் அனைத்து துறைகளிலும் சினிமா துறையில் தான் அதிகம் சம்பளம் என்று கூறப்படுகிறது. அதிலும் ஹீரோக்களுக்கு தான், அவர்கள் செய்யும் வேலையை விட பல மடங்கு சம்பளம் வழங்கப்படுவதாக, நடிகர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் நடிகர் ராதாரவியே பல முறை சொல்லியிருக்கிறார்.
சம்பம் மட்டுமா? ஹீரோக்கள் என்ன கேட்டாலும் டக்கென்று கொடுத்து விடுவார்களாம். அந்த அளவுக்கு சினிமாவில் நடிகர்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்க, அவர்களின் சம்பளத்தின் உண்மை நிலவரம் மட்டும் இதுவரை எந்த நடிகரும் வெளிப்படையாக சொன்னதில்லை.
அவர், இத்தனை கோடிகள் வாங்குகிறார், இந்த நடிகர் இவ்வளவு கோடி வாங்குகிறார் என்று பல தகவல்கள் வெளியானாலும் நடிகர்களின் சம்பள மட்டும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியானதில்லை.
இந்த நிலையில், பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் தமிழ் நடிகர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த பட்டியல்,
ரஜினிகாந்த் - ரூ.60 கோடி
கமல்ஹாசன் - ரூ.30 கோடி (2010ல் இருந்து தயாரிப்பு குழுவுடன் இலாப பங்கு வைத்து கொள்கிறார்)
விஜய் - ரூ. 40 கோடி
அஜித் - ரூ. 30 கோடி
சூர்யா - ரூ. 18 முதல் 22 கோடி
விக்ரம் - ரூ. 25 கோடி
சிவகார்த்திகேயன் - ரூ. 20 கோடி
விஜய் சேதுபதி - ரூ. 8 கோடி
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...