Latest News :

சம்பள பாக்கி விவகாரம் - 96 பட தயாரிப்பாளரின் அதிரடி நடவடிக்கை
Monday November-12 2018

96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு ஊதியபாக்கி இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார். 

 

சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நந்தகோபால், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தில்லாமல் மொட்டைக் கடுதாசி வந்திருப்பதாக குறிப்பிட்டார். 

 

இதுவரை நான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் எனது மனசாட்சிக்குட்பட்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் தயாரிப்பாளர் என்ற முறையில் முழுமையாக வழங்கியிருப்பதாக தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அறிக்கையை அனுப்பினார்களா அல்லது ஒரு சிலர் வேண்டுமென்றே அனுப்பியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டு பேசினார். 

 

இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் திங்கள்கிழமைக்குள்ளாக உரிய முடிவை எடுக்க வேண்டுமெனவும் அவ்வாறு எடுக்கவில்லையெனில் தான் ஒரு முடிவை அறிவிக்க உள்ளாதாகவும் தெரிவித்தார். 

தயாரிப்பாளர்கள் சங்கம் பேசி  எடுக்கிற எந்த முடிவுக்கும் தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார் நந்தகோபால்.

 

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினுள் மோதல்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கு அது குறித்து முழுமையான பதில் திங்கள்கிழமை தெரிவிக்கிறேன் எனவும் நந்தகோபால் தெரிவித்தார். 

 

அத்துடன் தயாரிப்பாளர் சங்கம் பேசி முடிக்காமல் காலம் தாழ்த்தினால் நான் office of the Director General competition commisiion of india ,New Delhi என்கிற அமைப்பின் மூலம் தகுந்த மேற் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகவும் நந்தகோபால் தெரிவித்தார்.

Related News

3731

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery