Latest News :

ரஜினி மகள் செளந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?
Tuesday November-13 2018

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல், அவரது இளைய மகள் செளந்தர்யா, அஷ்வின் என்ற சென்னையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படம் இயக்குவதில் செளந்தர்யா தீவிரம் காட்டி வந்தார்.

 

இதற்கிடையே, செளந்தர்யா - அஷ்வின் தம்பதிக்கு வேத் என்ற மகன் பிறந்தவுடன், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று விட்டனர். விவாகரத்துக்குப் பிறகு தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கிய செளந்தர்யா, தொடர்ந்து படம் இயக்குவதில் தீவிரம் காட்டி வந்தவர், தொழிலதிபர் ஒருவரது மகனை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும், தனுஷ் கட்டுப்பாட்டில் செளந்தர்யா இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

 

இந்த நிலையில், செளந்தர்யா தான் காதலித்து வருவதாக கூறப்பட்ட தொழிலதிபரின் மகனை இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

செளந்தர்யா திருமணம் செய்துகொள்ள இருப்பவரின் பெயர் விசாகன். இவர் வணங்காமுடி என்ற தொழிலதிபரின் மகன் ஆவார். மிகப்பெரிய கோடீஸ்வரரான விசாகன், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

 

தந்தையின் தொழிலை கவனித்துக் கொள்ளும் விசாகன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தில் பத்திரிகை நிருபர் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Visagan

 

செளந்தர்யா - விசாகன் திருமண செய்தி தான் கோடம்பாக்கத்தின் தற்போதைய பரபரப்பு செய்தி என்றாலும், செளந்தர்யாவின் இந்த முடிவுக்கு தனுஷ் சம்மதித்தது பெரிய ஆச்சர்யம் தான், என்றும் பேசப்பட்டு வருகிறது.

Related News

3732

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery