Latest News :

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’
Tuesday November-13 2018

சசிகுமாரை வைத்து ‘சுந்தரபாண்டியன்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், மீண்டும் சசிகுமாருடன் இணைந்திருக்கிறார். இவர்களது கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படத்திற்கு ‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

‘குற்றம் 23’, ’தடம்’ ஆகியப் படங்களை தயாரித்திருக்கும் ரெதான் - தி சினிமா பீப்பள் நிறுவனம் சார்பில் இந்தர்குமார் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குநர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

 

நேற்று பூஜையுடன் காரைக்குடியில் தொடங்கிய ‘கொம்புசச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பை நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் முடிய உள்ளது.

 

Kombu Vacha Singamda

 

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைக்கிறார். டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, அன்பறிவ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கின்றனர். ராஜு சுந்தரம் நடனம் அமைக்க, மைக்கேல்ராஜ் கலை நிர்மாணிக்க, மோகன்ராஜ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடல்கள் எழுதுகிறார்கள். பி.சந்துரு தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, நிகில் முருகன் மக்கள் தொடர்பு பணியை கவனிக்கிறார்.

Related News

3733

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery