ஒரு பக்கம் சமூக சேவை, மறுபக்கம் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என்று சினிமாவில் பிஸியாக இருக்கும் ராகவா லாரன்ஸ், தற்போது ‘முனி 4- - காஞ்சனா 3’ படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
பேய் படங்களை காமெடியாகவும் எடுக்கலாம் என்ற டிரெண்டை ‘முனி 3 - காஞ்சனா 2’ மூலம் கோடம்பாக்கத்தில் அறிமுகப்படுத்திய ராகவா லாரன்ஸ், தற்போது இயக்கி நடித்து வரும் ‘முனி 4 - காஞ்சனா 3’ படத்தை குழந்தைகளை குறி வைத்து எடுத்திருக்கிறாராம்.
மேலும், பிக் பாஸ் புகழ் ஓவியா இப்படத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், இதற்கு முன்பு வெளியான காஞ்சனா படங்கள் வசூலில் ரூ.100 கோடியை தாண்டியிருப்பதால் இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என்றும் கூறப்படுகிறது. வேதிகாவும் மற்றொரு ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளது. மிக பிரம்மாண்டமான முறையில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரோடு பார்த்து பயந்து, வயிறு வலிக்க சிரித்து மகிழும் விதத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...