தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் காஜல் அகர்வால் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், கமலின் ‘இந்தியன் 2’ விலும் காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் காஜல் அகவர்வாலுக்கு சினிமா பிரபலம் ஒருவர் மித்தமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால், மெஹ்ரின் பிர்ஸாடா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கவச்சம்’ என்ற தெலுங்குப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
படம் குறித்து பேசிய காஜல் அகர்வால், படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா கே.நாயுடு பற்றியும் பேசினார். அப்போது திடீரென்று காஜல் அகர்வாலை கட்டி அனைத்த ஒளிப்பதிவாளர் சோட்டா கே.நாயுடு அவரது கண்ணத்தில் பச்சக்கென்று முத்தம் கொடுத்தார்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியாக, காஜல் அகர்வாலும் இதனை சமாளிக்க முடியாமல் ”சான்ஸ் பீ டான்ஸ்” என்று கூறி சமாளித்தார்.
காஜல் அகர்வாலுக்கு பொதுவெளியில் ஒளிப்பதிவாளர் மித்தமிடும் இந்த புகைப்படமும், வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது...
அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’...