Latest News :

நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை! - ரஜினிகாந்த்
Tuesday November-13 2018

அரசியலில் ஈடுபட உள்ள நடிகர் ரஜினிகாந்த், அவ்வபோது தனது கருத்து மூலம் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாவிட்டது. 

 

இதற்கிடையே, ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் யார் யார், என்பது தனக்கு தெரியாது என்று ரஜினிகாந்த் கூறியது போல நேற்று செய்தி பரவியது. மேலும், பா.ஜ.க ஆபத்தான கட்சி என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல் பரவியது.

 

இந்த நிலையில், ராஜீவ் கொலை குற்றவாளிகள் மற்றும் பா.ஜ.க ஆபத்தான கட்சி என்று தான் கூறியதாக பரவிய தகவல்களை மறுத்திருக்கும் ரஜினிகாந்த், ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விவகாரம் குறித்து ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர், என்று தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த ரஜினிகாந்த், “7 பேர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசினேன். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.

 

பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே. ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்யட்டும்.

 

நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை, முழுமையாக இறங்கியதும் முழு பதில் சொல்வேன்.” என்று கூறினார்.

Related News

3741

பிரமாண்டமாக நடைபெற்ற ‘டெக்ஸ்லா’ பட துவக்க விழா!
Saturday March-07 2026

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...

அரசியல் கட்சி மாநாடு போல் நடந்த ‘லீடர்’ பட டீசர் வெளியீட்டு விழா!
Saturday March-07 2026

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது...

சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வருத்தம்
Saturday March-07 2026

அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’...

Recent Gallery