விஜயின் ’சர்கார்’ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது போல, மிகப்பெரிய வெற்றியும் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாள் முதலே பிரம்மாண்டமான வசூலை ஈட்டி வருவதாக கூறப்படுவதோடு, ரூ.200 வசூலை பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், வர்லட்சுமி உள்ளிட்ட ஒட்டு மொத்த படக்குழுவினரும் ‘சர்கார்’ மாபெரும் வெற்றி என்று அறிவித்ததோடு, சமீபத்தில் வெற்றியை கொண்டாடவும் செய்தார்கள்.
இந்த நிலையில், ‘சர்கார்’ உண்மையிலேயே வெற்றிப் படமா? என்பது குறித்து சென்னை ரோனினி திரையரங்கத்தின் உரிமையாளர் சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நேற்று திங்கட்கிழமை என்றாலும் படத்திற்கு நல்ல கூட்டம் வந்தது. சர்கார் பிளாக்பஸ்டர் படம்.” என்று தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், சர்கார் மிகப்பெரிய வெற்றிப் படம் என்பதை திரையரங்க உரிமையாளர்களே அறிவித்திருப்பதால், சர்கார் படம் பற்றி வசும் வசூல் உள்ளிட்ட அனைத்தும் உண்மை என்பது நிருபிக்கப்பட்டுவிட்டது.
#Sarkar good hold on Monday @rohinisilverscr !! Blockbuster 💥💥💥
— Nikilesh Surya (@NikileshSurya) November 12, 2018
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...