‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆவார். நடிப்பது மட்டும் இன்றி சொந்தமாகவும் திரைபப்டங்களை தயாரிக்க தொடங்கியுள்ள விஷ்ணு விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ படம் பெரிய வெற்றிப் படம் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது.
இப்படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்து வருவதோடு, தயாரித்தும் வரும் விஷ்ணு விஷால், தனது காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்துவிட்டதாக இன்று அறிவித்திருப்பது திரையுலகினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் இயக்குநருமான நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து வந்த விஷ்ணு விஷால், கடந்த 2011 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், இன்று தனது பி.ஆர்.ஒர் மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட விஷ்ணு விஷால், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து ஒரு ஆண்டாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது விவாகரத்து செய்துவிட்டதாக, தெரிவித்துள்ளார்.

மேலும், இனி தாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பதோடு, தங்களுக்கு பிறந்த குழந்தையை நல்லபடியாக வளர்க்கவும் செய்வோம், என்றும் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் ஜெயிக்கும் நடிகர், நடிகைகள் இல்லற வாழ்வில் இப்படி தோல்வியடைவது தொடர் கதையாகி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...