மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கும் கமல்ஹாசன், தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார். தனது ‘சபாஷ் நாயுடு’ படத்தை விரைவில் வெளியிட உள்ள கமல், அடுத்ததாக ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள ‘இந்தியன் 2’ படத்தின் செட் போடும் பணிகள் தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘இந்தியன் 2’ படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க சிம்புவுடன் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கமலின் இளமை கால தோற்றத்தில் துல்கர் சல்மான நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...