இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் படத்தை பாராட்டியதோடு, மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.
இந்த நிலையில், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜின் இரண்டாவது படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பார்த்த தனுஷ் மாரி செல்வராஜை வெகுவாக பாராட்டியதோடு, கதை ஏதும் கேட்காமலேயே அவரது இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு, தனது வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தயாரிக்க இருக்கிறார்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...