தற்போதைய தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக நயந்தாரா வலம் வந்தாலும், ஹீரோக்களின் பேவரைட் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். அதிலும் ‘நடிகையர் திலகம்’ படத்திற்குப் பிறகு அவர் மீதும், அவர் நடிப்பு மீதும் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் மரியாதை வந்திருப்பதால் தொடர் வாய்ப்புகளும் வர தொடங்கியுள்ளது.
’சாமி 2’, ‘சண்டக்கோழி 2’, ‘சர்கார்’ என்று கீர்த்தி சுரேஷின் நடிப்பில் பெரிய படங்கள் தொடர்ந்து வெளியானாலும், தற்போது கீர்த்தி சுரேஷ் கவலையில் தான் இருக்கிறாராம். காரணம், அவர் நடிக்கும் படங்கள் அனைத்திலும் அவரது கதாபாத்திரம் டம்மியாக்கப்பட்டுவிடுகிறதாம். ‘சண்டக்கோழி 2’, ‘சர்கார்2 ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் இல்லை, என்றால் கூடா நல்லாதான் இருந்திருக்கும், என்று விமர்சனத்தில் குறுப்பிட்டது கீர்த்தியை ரொம்ப காயப்படுத்தி விட்டதாம்.
இதனால் அப்செட்டில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், இனி நயந்தாரா போலா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது குறித்து, தனது குடும்பத்தாரிடம் ஆலோசனை செய்திருக்கிறார். நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்தால், காணாமால் போய்விடுட, என்று அவரது குடும்பத்தார் கூறிய அட்வைசை ஏற்றுக்கொண்ட கீர்த்தி, இனி பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிப்பது என்றால் ஒரு கண்டிஷனோடு தான் நடிக்க வேண்டும், என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.
அது என்னவென்றால், தன்னிடம் கதை சொல்லும் போது, தனக்கு சொல்லப்படும் அத்தனை காட்சிகளும் படத்தில் இடம்பெற வேண்டும், அப்படி இடம்பெறாது என்று மறுத்தால் அந்த படத்தில் நடிக்க கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். இந்த கண்டிஷனுக்கு ஓகே சொல்லும் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே இனி நடிப்பது என்று முடிவு செய்துள்ள கீர்த்தி சுரேஷ், அப்படியே கதை தேர்விலும் கவனம் செலுத்த போகிறாராம்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...