தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் நடிகர்களில் அருண் விஜயும் ஒருவர். பல திறமைகளைக் கொண்ட இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அப்படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் இவர் நடித்த மல்டி ஹீரோ சப்ஜக் கொண்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டு பெற்ற அருண் விஜய், ஹீரோவாக ‘குற்றம் 23’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார். இதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திலும் இவரது வேடம் பாராட்டப்பட்டது. தற்போது ‘தடம்’ என்ற படத்தில் அருண் விஜய் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சிறிய விபத்தில் சிக்கிய அருண் விஜய்க்கு காலில் அடிபட்டுள்ளது. தற்போது மருத்துவ சிகிச்சைப் பெற்று வரும் அவர், “ரசிகர்கள் அன்பால் விரைவ் இல் குணமாகி வந்துவிடுவேன் “ என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...