நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா, அஷ்வின் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவான நிலையில், திடீரென்று கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்ததோடு, நீதிமன்றம் மூலம் விவாகரத்தும் பெற்றுவிட்டார்.
விவாகரத்திற்கு பிறகு திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தவர், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த வாரம் மற்றொரு தகவல் வெளியானது. மேலும் செளந்தர்யா - விசாகன் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால், இதற்கு செளந்தர்யா தரப்போ அல்லது விசாகன் தரப்போ எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
தொழிலதிபர் வணங்காமுடியின் மகனான விசாகன் எம்.பி.ஏ பட்டதாரி என்றும், அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றதோடு, ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், என்றும் நாம் ஏற்கனவே தெரிவித்தோம்.
தற்போது விசாகனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Apex என்ற புகழ் பெற்ற மற்றும் இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனம் விசாகனுக்கு சொந்தமான நிறுவனமாம். இந்த நிறுவனத்தின் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம் வருவதோடு, விசாகனுக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் ஒரு படத்தில் விசாகன் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது...
அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’...