நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், இந்தி சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த நிலையில், தனுஷ் நடித்த இந்தி படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்ததோடு, அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்தார். அத்துடன் நடிப்பதை நிறுத்துக் கொண்டாலும், அவர் எப்போதும் லைம் லைட்டிலேயே இருந்தார்.
இதற்கிடையில், அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படங்களை வெளியிட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறிய அக்ஷரா ஹாசன், அது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலர் தனுஷ் விர்வாணி மீது சந்தேகம் கொண்ட போலீஸ், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது. ஆனால், தனக்கும், அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்று அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது...
அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’...