சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டை பெற்ற சசிகலா, தற்போது பெங்களூர் அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்படுவதாக, கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ஐபிஎஸ் அதிகாரி ரூபா குற்றம் சாட்டியதோடு, வீடியோ ஆதரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த குற்றச்சாட்டை சிறை அதிகாரிகள் மறுத்தாலும், ஐபிஎஸ் அதிகாரி ரூபா, தொடர்ந்து சிறை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியதோடு, இந்த விவகாரம் தொடர்பாக தன் மீது வழக்கு போட்டாலும் அதை எதிர்கொள்ள தயார், என்று கூறியிருந்தார். இதையடுத்து, அவர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டார். இருந்தாலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள தீபா தொடர்ந்து சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்து அவ்வபோது ஊடகங்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், போலீஸ் அதிகாரி ரூபாவின் வாழ்க்கையை படமாக எடுக்க இயக்குநர் ரமேஷ் முடிவு செய்துள்ளார். இதற்கான அனுமதியை அவர் ரூபாவிடம் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரூபா தொடர்ந்து குரல் கொடுக்கும் விவகாரம் மட்டும் இன்றி, ரூபா கையாண்ட மேலும் சில வழக்குகள் தொடர்பாகவும் இப்படத்தில் சொல்லப்பட இருக்கிறார்களாம்.
ரூபா வேடத்தில் நடிக்க அனுஷ்கா அல்லது நயந்தாரா ஆகியோரிடம் பேச இருக்கிறார்களாம். இதில், நயந்தாராவை நடிக்க வைக்கத்தான் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளதால், எப்படியாவது நயந்தாராவை இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட வேண்டும் என்ற பணியில் முனைப்பு காட்டி வருகிறார்கள்.
இந்த படத்தில் நயந்தாரா நடிக்க சம்மதித்தால், சசிகலாவை எதிரியாகிவிடுவாரோ!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...