தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி, ஹீரோ அவதாரம் எடுத்ததுடன், கூடவே தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். முதல் படம், இரண்டாம் படம் என்று தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த விஜய் ஆண்டனி கடந்த சில வருடங்களாக தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார்.
விஜய் ஆண்டனி ஒரே மாதிரியாக நடிக்கிறார், என்ற விமர்சனம் எழுந்ததால் காமெடி கலந்த படங்களில் நடிக்க முயற்சித்த விஜய் ஆண்டனிக்கு தோல்வியே கிடைத்தது. இருந்தாலும் ‘பிச்சைக்காரன் ‘ படத்தின் மூலம் மீண்டும் வெற்றியைக் கொடுத்த விஜய் ஆண்டனி, அப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்து வந்ததால், கடன் தொல்லைக்கு ஆளானார்.
’திமிரு புடிச்சவன்’ படத்தின் பிரஸ் மீட்டில், விஜய் ஆண்டனியே தனக்கு நிறைய கடன் இருக்கிறது, அதற்காக தான் படத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்கிறேன், என்று கூறிய நிலையில், இன்று வெளியாகியிருக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருவதால், அவர் ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.
மேலும், இனி சொந்தமாக படங்கள் தயாரிக்கப் போவதில்லை என்ற முடிவு எடுத்திருக்கும் விஜய் ஆண்டனி, பிற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதோடு, இரண்டு வருடங்களுக்கு இசையமைக்கப் போவதில்லை என்ற முடிவுக்கும் வந்துவிட்டாராம்.
மொத்தத்தில், இனி நடிப்பு ஒன்றை மட்டுமே குறி வைக்க இருக்கும் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் என்ற அவதாரத்தில் இருந்து விடைபெறப் போகிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...