ரஜினி, கமல் ஆகியோர் நேரடி அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், கமலைப் போல ரஜினிகாந்த் இன்னும் கட்சி பெயரை அறிவிக்கவில்லை. மேலும், தனது ஒவ்வொரு பேச்சின் மூலம் சில சர்ச்சைகளில் சிக்கி வருவதை வாடிக்கையாகவும் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய ரஜினிகாந்த், ரசிகர்கள் அந்த உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்தின் உருவ முத்திரையை பொறித்து கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக அரசு வழங்கிய நிவாரண பொருட்களில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உருவ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், ஸ்டிக்கர் ஒட்டிய பிறகே நிவாரண பொருட்கள் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் அதிமுக-வின் தீவிரம் காட்டியதால், சரியான நேரத்தில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்காமல் போனது.
அதிமுக-வின் இத்தகைய நடவடிக்கையை சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்ததோடு, திரைப்படங்களிலும் இதனை சுட்டிக்காட்டி விமர்சித்தார்கள். ஏன், ஜெயலலிதா மறைந்தாலும், அவரது இந்த ஸ்டிக்கர் விஷயம் மட்டும் இன்னும் மறையவில்லை. தற்போது வரை, தமிழ் சினிமாவில் வெளியாகும் அரசியல் படங்களில் இந்த ஸ்டிக்கர் மேட்டரை சுட்டிக் காட்டி விமர்சித்து வருகிறார்கள்.
அதிமுக கூட ஏதோ அரசியல் கட்சி, தனது கட்சி தலைவர் மற்றும் முதல்வருக்காக ஸ்டிக்கர் ஒட்டினார்கள். ஆனால், இந்த ரசிகர்கள் ரஜினி கட்சியே தொடங்கவில்லை அதற்குள்ளே இப்படி முத்திரை குத்தி பிராண்டிங் செய்கிறார்களே, என்று பலர் சிரிப்பாய் சிரிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
ரஜினியின் பேட்டியால் சிரித்து வந்த பொதுமக்கள், தற்போது அவரது ரசிகர்களின் செயல்பாட்டாலும் சிரிக்க தொடங்கிவிட்டார்கள்.
இனி...தமிழக மக்களுக்கு நல்லா பொழுதுபோகும்...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...