Latest News :

பெண்களுக்காக போராட களம் இறங்கிய சத்யராஜ்!
Monday November-19 2018

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த சத்யராஜ், தற்போது முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது பெண்களுக்காக போராடவும் களத்தில் இறங்கிவிட்டார்.

 

ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் மீராசாஹிப் தயாரிப்பில், தீரன் இயக்கும் ’தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற படத்தில் தான் சத்யராஜ் பெண்களுக்காக போராடும் ஒரு போராளி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பை சமூக போராளி திருமுருகன் காந்தி சமீபத்தில் வெளியிட்டார்.

 

படம் குறித்து தயாரிப்பாளர் சஜீவ் மிராசாஹிப் கூறுகையில், “சத்யராஜ் சாரை எங்கள் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அனைவருக்கும் பரவக்கூடிய நேர்மறையான சக்தி அவருக்குள் இருக்கிறது. இந்த ஸ்கிரிப்ட் அவரை இந்த படத்தில் கோரியது. இயக்குநர் தீரஜ் இந்த கதையை என்னிடம் கூறியபோது, சத்யராஜ் சார் மட்டுமே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என நாங்கள் உறுதியாக நம்பினோம். அந்த அளவு ஒரு மெசேஜ் இந்த படத்தில் இருக்கிறது, அதை சொல்லும் அளவுக்கான சக்தி அவருக்கு இருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக நான் இந்த படத்தை தமிழில் தயாரிக்க விரும்பிய காரணம், இந்த படம் மிகப்பெரிய அளவில் சென்று சேரும் என்று உறுதியாக நம்புவது தான். மேலும், தமிழ்நாடு எப்போதும் சமூக நீதியை நிலை நிறுத்தும். டிசம்பர் மத்தியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறோம்” என்றார். 

 

இயக்குனர் தீரன் கூறும்போது, “என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்த தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் சாருக்கு நன்றி. ஒரு தைரியமான நடிகரையும் தாண்டி இந்த திரைக்கதை ஒரு தைரியமான தயாரிப்பாளரை கோரியது. சஜீவ் மீராசாஹிப் சார் ஒரு தயாரிப்பாளராகவும், சத்யராஜ் சார் ஒரு ஹீரோவாகவும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர். படத்தின் கதாநாயகன் சமுதாய நீதியின் போர்வீரன். சத்யராஜ் சார் சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்ற ரீதியில் ஒரே தேர்வாக இருந்தார். நான் அவரது எளிமை, அவரது முயற்சியால் ஈர்க்கப்பட்டேன். எங்கள் படத்தின் தலைப்பை அறிவிப்பதற்கு ஒரு நிஜ கள போராளி தேவைப்பட்டார் உடனே சமூக ஆர்வலர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை  படத்தின் தலைப்பை வெளியிட முடிவு செய்தோம். 

 

’தீர்ப்புகள் விற்கப்படும்’ உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. சமூக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு தரமான பொழுதுபோக்கு படத்தை வழங்கும் எங்கள் நோக்கம் இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தின் மூலம் தெரிய வரும். இந்த படம் முழுக்க ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

 

’கருடவேகா என்ற தெலுங்குப் பட புகழ் ஒளிப்பதிவாளர் ஆஞ்சி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ‘யாமிருக்க பயமேன்’ மற்றும் ‘காட்டேரி’ படங்களுக்கு இசையமைத்த பிரசாத் எஸ்.என் இசையமைக்கிறார். சரத் என்ற அறிமுக எடிட்டர் எடிட்டிங் செய்ய, சுரேஷ் கல்லெரி கலையை நிர்மாணிக்கிறார். 

 

படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

Related News

3767

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery