’தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் அட்லீ விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். விஜயின் 63 வது படமான இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பது யார்? என்ற கேள்வியை விட படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும், என்பது தான் ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
இதற்கிடையே, இப்படம் அரசியல் பின்னணியை கொண்ட படம் என்றும், இதற்கு ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பை அட்லீ பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால், இது குறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்காத அட்லீ, தற்போது விஜயின் 63 வது படம் குறித்த சீக்ரெட்டை வெளியிட்டிருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய இயக்குநர் அட்லீ, ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பை பதிவு செய்து வைத்திருப்பது உண்மை தான். அந்த தலைப்புக்கு ஏற்ற அரசியல் கதை என்னிடம் இருப்பதும் உண்மை தான். ஆனால், விஜயின் 63 வது படம் அரசியல் பின்னணி கொண்ட படம் அல்ல, படத்திற்கு ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பும் வைக்கப்போவதில்லை. அரசியல் பின்னணி கொண்ட படத்தை இயக்கும் போது அந்த தலைப்பை வைத்துக் கொள்வேன்.” என்று கூறியுள்ளார்.
மொத்தத்தில், ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பு விஜயின் 63 வது படத்திற்கு வைக்கப் போவதில்லை என்பதை இயக்குநர் அட்லீ தெளிவாக கூறிவிட்டார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...