Latest News :

போலீஸ் யூனிபார்ம் போடும் ஆண்ட்ரியா!
Monday November-19 2018

கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா, கவர்ச்சி மற்றும் நடிப்பு என்று இரண்டையுமே அபரிவிதமாக வெளிப்படுத்திய ‘தரமணி’ படத்தை தொடர்ந்து பல ஆக்‌ஷன் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் ஆண்ட்ரியா நடிக்க இருக்கும் புதிய ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் யூனிபார்ம் போடுகிறார்.

 

ஆம், முதல் முறையாக ஆண்ட்ரியா காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை பவானி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்க, ராஜேஷ் குமார் தயாரிப்பில், கன்னடத்தில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘தில்’ படத்தை இயக்கிய தில் சத்யா இப்படத்தை இயக்குகிறார். கன்னடத்தில் பல படங்களை இயக்கியிருக்கும் தில் சத்யா, சில படங்களை தயாரித்திருப்பதோடு, 150 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

 

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். 

 

ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.

 

சென்னை, கொச்சின், பரோடா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Related News

3769

பிரமாண்டமாக நடைபெற்ற ‘டெக்ஸ்லா’ பட துவக்க விழா!
Saturday March-07 2026

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...

அரசியல் கட்சி மாநாடு போல் நடந்த ‘லீடர்’ பட டீசர் வெளியீட்டு விழா!
Saturday March-07 2026

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது...

சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வருத்தம்
Saturday March-07 2026

அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’...

Recent Gallery