பிக் பாஸ் புகழ் நடிகை சுஜா வாருணி, ஜூனியர் சிவாஜி என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமான சிவாஜி தேவை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியதை தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதற்கிடையே, சிவாஜி தேவ் தனது பெயரை சிவகுமார் என்று மாற்றிக் கொண்டதோடு, ஜூனியர் சிவாஜி என்ற பட்டத்தை துறந்தார்.
இந்த நிலையில், சுஜா வாருணி - சிவகுமார் திருமணம் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.
சரியாக காலை 10.17க்கு நடைபெற்ற திருமணத்தில் நடிகைகள் ராதிகா, லிஸி, இயக்குநர் பிரிதர்ஷன், நடிகர்கள் சிவகுமார், எம்.எஸ்.பாஸ்கர், மு.க.தமிழரசு, துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
நடிகர் சிவகுமார் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் - மீனாக்ஷி தம்பதியின் மகன் ஆவார். மீனாக்ஷி நடிகை ஸ்ரீப்ரியாவின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...