தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நயந்தாராவை தமிழ் ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர். தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வெற்றிக் கொடுக்கும் நயந்தாரா, முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானுடன் நயந்தாரா கைகோர்த்துள்ளார். ஆம், இந்திய ஹாக்கி அணியை ஊக்குவிப்பதற்காக ‘ஜெய்ஹிந்த் இந்தியா’ என்ற தலைப்பில் ஆல்பம் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இயக்கியிருக்கும் இந்த வீடியோ பாடலில் ஷாருக்கான், நயந்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான ஆகியோர் நடனம் ஆடியுள்ளனர்.

குல்சர் பாடல் எழுத, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த புரோமோ விடீயோவை ஏ.ஆர்.ரஹ்மான், தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வைரலாக பரவி வருகிறது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...