சினிமா நடிகர், நடிகைகளைப் போல தற்போது டிவி தொகுப்பாளினி மற்றும் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி மிகப்பெரிய ரசிகர்களை கொண்டவர் பிரபல டிவி தொகுப்பாளினி துர்கா மேனன்.
மலையாள தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்த துர்கா மேனன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
35 வயதான துர்கா மேனன், லுபஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 21 நாட்களாக மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வந்த துர்காவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கல் தீவிர சிகிச்சை அளித்தும், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவரது இறுதி சடங்குகள் அவரது சொந்த ஊரான கொடுங்களூரில் நடைபெற உள்ளது.
துர்கா மேனனின் மரணம் மலையாள டிவி மற்றும் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...