Latest News :

விஜய் சேதுபதிக்கு இணையான’சீதக்காதி’ வில்லன்! - சிலாகிக்கும் இயக்குநர்
Wednesday November-21 2018

பேஸன் ஸ்டுடியோற் தயாரிப்பில், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றத்தில் உருவாகி வரும் ‘சீதக்காதி’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

மேலும், படத்தில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களை தனி தனியாக அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் பாலாஜி தரணிதரன், படத்தின் வில்லன் குறித்து சிலாகித்து பேசியிருப்பதோடு, அந்த கதாபாத்திரம் ஹீரோ விஜய் சேதுபதிக்கு இணையான கதாபாத்திரமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

 

இது குறித்து இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூறுகையில், “உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது. இது கதாபாத்திரத்தின் இயல்பு அதற்கு முக்கிய காரணம். திரைக்கதையை எழுதும் போதே, இந்த கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இல்லாமல், புதுமையாக இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை இருந்தது. இந்த கதாபாத்திரம் உங்களை வெறுப்புக்கு ஆளாக்காமல், சிறு புன்னகைக்கு ஆட்படுத்தும். 

 

தோற்றத்தை பொறுத்தவரை சில அசாதாரண தேர்வுகளை செய்தோம். இந்த கதாபாத்திரத்துக்கு நாங்கள் சில பிரபலமான பெயர்களை கூட பரிசீலனை செய்தோம். அவர்களுக்கு கதாபாத்திரம் பிடித்திருந்தாலும் அவர்களது கால சூழலால் இதை செய்ய முடியவில்லை. 

 

ஒரு எதிர்பாராத திருப்புமுனையாக நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் அவர்களை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். உடனடியாக என் வில்லனை அங்கு கண்டேன். ஆடிஷன் செய்ய அவருக்கு தயக்கம் இருந்தது. இறுதியில் அந்த முயற்சியை மேற்கொண்டார். அந்த கதாபாத்திரத்தில் பொருந்தினார். குறுகிய கால நடிப்பு பயிற்சியோடு இந்த படத்துக்குள் வந்தார்.  

 

ரசிகர்கள் படம் முடிந்து போகும்போது சீதக்காதி (விஜய் சேதுபதி) கதாபாத்திரத்தை மட்டுமல்லாமல் இந்த வில்லன் கதாபாத்திரத்தையும் நினைத்துக் கொள்வார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பக்ஸ் கதாபாத்திரம் அளவுக்கு இந்த கதாபாத்திரமும் இருக்கும், பேசப்படும்.” என்றார்.

Related News

3785

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

பிரமாண்டமாக நடைபெற்ற ‘டெக்ஸ்லா’ பட துவக்க விழா!
Saturday March-07 2026

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...

Recent Gallery