நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
கதிர், ‘கயல்’ ஆனந்தி நடிப்பில் உருவான இப்படம் சமூகத்திற்கு தேவையான முக்கியமான திரைப்படம், என்று பல அரசியல் தலைவர்களாலும், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களாலும் மட்டும் இன்றி, அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டும் பெற்றது.
இந்த நிலையில், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 49 வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில், பங்கேற்றுள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைபப்டம் இன்று (நவ.21) இரவு 8 மணிக்கு திரையிடப்பட்டது. இந்திய திரையுலகினர் மட்டும் இன்றி, உலக திரையுலகினரும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...