நடிகர் விஷால் இன்று தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மரம் நடுதல், முதியர் இல்லத்திற்கு உணவு வழங்குதல் என்று பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெர்சி ஹோம் என்ற ஆதரவற்ற முதியோர் உள்ளத்தில் உள்ள முதியவர்களுக்கு வி.எப்.எப் மேலாளர் எம்.எஸ்.முருகராஜ், அகில இந்திய விஷால் ரசிகர் மன்ற தலைவர் சி.ஜெயசீலன், செயலாளர் வி.ஹரிகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ஓட்டேடி எஸ்.சீனு, எஸ்.பி.ராஜா ஆகியோர் உணவு வழங்கினார்கள்.
மேலும் ரசிகர்கள் பலர் அரசியல் தலைவர்களுக்கு கொடுப்பது போல, இன்றைய அனைத்து பத்திரிகைகளிலும் விஷாலை வாழ்த்தி முழு பக்கத்திலான விளம்பரமும் செய்திருந்தனர்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...