90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ரோஜா, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய மொழி சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். 10 ஆண்டுகளில் 100 படங்கள் நடித்த நடிகை என்ற பெருமையையும் பெற்றார்.
1999 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த ரோஜா, கடந்த 2014 ஆம் ஆண்டு நகரி தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் மாநில மகளிரணி தலைவியாகவும் இருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடிய ரோஜா, பிறந்தநாளை முன்னிட்டு நகரி தொகுதியில் உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்திற்கு ஒய்.எஸ் அண்ணா உணவகம் என்று பெயர் வைத்திருப்பதோடு, அந்த உணவகத்தில் ஒரு சாப்பாடு ரூ.4 -க்கு வழங்கப்படுகிறதாம்.
ரோஜாவின் இத்தகைய நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ரோஜாவை போல பிற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களையும் அவர் அவர் தொகுதியில் இத்தகைய உணவகத்தை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறாராம்.
'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார்...
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...