ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான 'ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்' தமிழ்நாட்டின் உரிமத்தை வாங்கியுள்ளது.
1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் 'நீயா'. தற்போது 'நீயா 2' படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ். மேலும், ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா போன்ற மக்களைக் கவரக்கூடிய நடிகர், நடிகைகள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். 'நீயா' படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த 'ஒரே ஜீவன்' பாடலை மறுஉருவாக்கம் செய்திருக்கின்றனர்.
அதோடு, ஷபீர் இசை விருந்தாக 'தொலையுறேன்' பாடல் ஏற்கனவே வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்ற நிலையில், நேற்று 'இன்னொரு ரவுண்டு' என்ற பாடலை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலும் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதித் தீவிரமான காதல் கதை என்பதால், காட்சியமைப்பில் அதிக கவனம் கொண்டு 'ஜம்போ சினிமாஸ்' சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார். 'நீயா' படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திகிலில் ஆழ்த்தியது பாம்பு. அதுபோலவே, 'நீயா 2'விலும், 22 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நடித்துள்ளது. பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை மற்றும் சாலக்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
எல். சுரேஷ் படத்தை இயக்குவதோடு கதை, திரைக்கதை மற்றும் வசனம் அனைத்தையும் இவரே செய்கிறார். படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார்...
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...