மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் 'கள்ளபார்ட்' அரந்த்சாமி கரானாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக ரெஜினா நடிக்கிறார். மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ் பாப்ரிகோஷ் ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - அரவிந்த்கிருஷ்ணா, இசை - நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டிங் - எஸ்.இளையராஜா, கலை - மாயபாண்டி, சண்டை பயிற்சி - மிராக்கிள் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை - ராமச்சந்திரன், தயாரிப்பு - எஸ்.பார்த்தி எஸ்.சீனா, வசனம் - ஆர்.கே, திரைக்கதை, டைரக்ஷன் - பி.ராஜபாண்டி.
வித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஏவி எம் ஸ்டூடியோவில் மிகப் பிரமாண்டமான மூன்று விதமான அரங்குகள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
படத்தின் முக்கியமான காட்சிகள் ஆக்ஷன் காட்சிகள் செண்டிமெண்ட் காட்சிகள் படமாக்கப் பட்டது. அரவிந்த் சாமி ரெஜினா காட்சிகள் பெரும்பகுதி படமாக்கப்பட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடை பெற உள்ளது.
'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார்...
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...