பரிஷ்த்தா பிக்சர்ஸ் சார்பில் அரசர் ராஜா தயாரிக்கும் படம் ‘பயங்கரமான ஆளு’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், ஹீரோவாகவும் நடிக்கிறார் அரசர் ராஜா. இவருக்கு ஜோடியாக ரிஷா நடிக்க, மற்றொரு ஹீரோயினாக சாரா நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்களுக்கு கபிர் அலிகான் இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் பின்னணி இசை பிரத்யேகமாக இருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்க வகையில் இருக்க வேண்டும் என்பதால், இசை அரசர் தஷி இப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார். செல்வமனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் பாடல்களை தமிழ்க்குமரன் எழுத, கிக்காஸ் காளி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். சரண் பாஸ்கர் நடனத்தை வடிவமைக்கிறார்.
படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் குறித்து இயக்குநரும், ஹீரோவும், தயாரிப்பாளருமான அரசர் ராஜாவிடம் கேட்ட போது, “நம் இந்திய திருநாடு சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. இவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்துள்ளனர். அந்த அரிய கலையை சாமானிய மனிதர் கைகொள்ளும் போது, அவன் சந்திக்க கூடிய மாபெரும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.
இந்திய மண்ணில், இப்படிப்பட்ட அரிய சக்திகள் குறித்தோ, சித்தர்களின் அரிய ரகசியங்கள் குறித்தோ இதுவரை யாரும் சொன்னதில்லை. பல்வேறு நூல்கள், ஓலை சுவடிகள் மற்றும் புராணங்கள் உள்ளிட்ட பலவற்றில் இருந்து கண்டுபிடித்த விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையோடு, பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கி வருகிறோம்.” என்றார்.
இப்படத்தின் மூலம் இயக்குநர், ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ள அரசர் ராஜா, படம் இயக்குவதற்காக தான் வந்தாலும், தனது கதைக்கு ஏற்ற சரியான ஹீரோ அமையாததால் அவரே ஹீரோவாக நடித்துவிட்டார். இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பு என்று மூன்றையும், அதுவும் அறிமுகப் படத்திலேயே கையாண்ட அனுபவம் பற்றி கேட்டால், பாக்யராஜ் சார் தான் எனது மானசீக குரு. அவரது படங்களைப் பார்த்து...பார்த்து...திரைக்கதை எழுத பழகிக்கொண்டேன். அதனால் எனக்கு கதை, திரைக்கதை எழுதுவது பெரிய கஷ்ட்டமில்லை. அதனால், நடிப்பு இயக்கம் மற்றும் தயாரிப்பு என மூன்றையும் நான் இஷ்ட்டப்பட்டு செய்ததால், அவை எனக்கு கஷ்ட்டமாகவே இல்லை, என்றார்.
சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் இரண்டு பாடல்கள். அதில் ஒன்று சாவு கூத்து பாடல் மற்றும் மொலொடி பாடல் என்று இரண்டும் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தோடு சேர்த்து பார்க்கும் போது இன்னும் பெரிய இடத்திற்கு பாடல்கள் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்த அரசர் ராஜா, இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி பெரிதும் பேசப்படும், என்றார்.
வேலூரில் உள்ள பூச்சாண்டிகுப்பம் என்ற கிராமத்தில் உள்ள பழைய பிரெஞ்ச் கோட்டையில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டுள்ளதாம். இதுவரை எந்த சினிமா படப்பிடிப்பும் நடக்காத அந்த கோட்டையில் முதல் முறையாக ‘பயங்கரமான ஆளு’ படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். அதிரடியான அந்த ஆக்ஷன் காட்சியில், கொரில்லா, மனிதர் என்று கூடு விட்டு கூடு பாயும் முறையை கையாண்டிருப்பதோடு, தீயிட்டு ஒருவரை எரிப்பது போன்ற காட்சியை ஒரிஜனலாக படமாக்கியிருக்கிறார்கள். தற்போது இதுபோன்ற காட்சிகளை கிராபிக்ஸில் எடுத்து வரும் நிலையில், அரசர் ராஜா, காட்சிகள் ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து, மிகவும் பாதுகாப்பான முறையில் அந்த காட்சியை படமாக்கியிருக்கிறார். திரையில் அந்த காட்சியும், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமாம்.
விறுவிறுப்பான திரைக்கதையோடும், சுவாரஸ்யமான காட்சிகளோடும். அதே சமயம், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு காமெடி, காதல், ஆக்ஷன் என அனைத்தும் சேர்த்து ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் ‘பயங்கரமான ஆளு’ வரும் டிசம்பர் 14 ஆம் தேதி ரிலிஸாகிறது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...