Latest News :

சீனாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த ஆரி!
Tuesday August-29 2017

ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக நானும் ஒரு விவசாயி என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு , திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் - நல்லநிலம் என்ற ஊரில்  நடைபெற்றது.

 

இதில் சத்யபாமா யூனிவெர்சிட்டி மற்ற ஜேபிஆர் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மொத்தம் 2683 பேர் ஒரே நேரத்தில் கலந்துகொண்டு, ஒருவருக்கு தலா இரண்டு நாற்றுகள் வீதம் நடப்பட்டது. 

 

இந்த நிகழ்வின் போது மாணவர்களை உற்சாகப்படுத்த கிராமிய பாடகி சின்ன பொண்ணு கலந்து கொண்டு நாட்டுபுற பாடல்களை பாடினார்.

மேலும் நண்பர்கள் குழுவினர் பறை இசைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் குழுவினர் சிலம்பாட்டம் நிகழ்த்தினர் .

 

இந்த நிகழ்வு சீனா நடத்திய கின்னஸ் சாதனையானா 2017 பேரை கொண்டு நடத்திய சாதனையை முறியடிக்கும் விதமாக 2683 பேரை கொண்டு நிகழ்த்தப்பட்டது.

 

இந்த நிகழ்வை ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து சத்யபாமா யூனிவெர்சிட்டி மற்றும் ட்ரான்ஸ் இந்தியா நிறுவனம் சேர்ந்து சிறப்பாக நடத்தியது.

 

இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் கின்னஸ் சாதனை பெறவேண்டும் என்பதுடன் மட்டும் இல்லாமல் விவசாயத்தின் பெருமையை பறை சாற்றும் விதமாக அமைக்க பெற்றது.

Related News

380

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery