தமிழ் சினிமா நடிகர்கள் பலர் குடி போதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டி, போலிசிடம் சிக்கும் சம்பவங்கள் அவ்வபோது சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில், தற்போது பிரபல நடிகை ஒருவர் குடி போதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கியுள்ளார்.
பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகளும், நடன இயக்குநருடம் நடிகையுமான காயத்ரி ரகுராம், தான் அந்த மது போதை மங்கை.
பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமான காயத்ரி ரகுராம், தற்போது சில படங்களில் நடித்து வருவதோடு, சில படங்களில் நடன இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக அடையாறை நோக்கி வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் தாறுமாறாக வருவதை கண்ட போலீசார், அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், காரை ஓட்டி வந்தது நடிகை காயத்ரி ரகுராம் என்பது தெரிந்தது. கார் கண்ணாடியை கீழே இறக்கியதும் அவரிடம் மதுபான வாடை வந்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரை காரில் இருந்து இறங்கும்படியும், மது போதையை கண்டுபிடிக்கும் கருவியில் மூச்சு காற்றை ஊதும்படியும் கூறினார்.
ஆனால், போலீசாருடன் தகராரில் ஈடுபட்ட காயத்ரி, தான் மது குடிக்கவில்லை என்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். பிறகு ஒரு வழியாக அவர் மது போதையை கண்டுபிடிக்கும் கருவியில் மூச்சு காற்றை விட்டவுடன், அவர் அதிகமான மது அருந்திருப்பது தெரிய வந்தது. உடனே, அவரை கார் ஓட்ட அனுமதிக்காத போலீசார், ஒரு காவலர் மூலம் அவரை பத்திரமாக வீட்டில் இறக்கிவிட்ட பிறகு, அவரது காரை அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர்.
மேலும், மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக நடிகை காயத்ரிக்கு ரூ.3,500 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்தை அவர் நேற்று அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் செலுத்திவிட்டு தனது காரை எடுத்துச் சென்றார்.
தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவலால் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது...
ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்...