பாலியல் புகார் மூலம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் மீதும் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது சென்னையில் செட்டிலாகியுள்ள ஸ்ரீரெட்டி தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ஸ்ரீரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்ததால், அவர் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டி, தற்போது லாரன்ஸை புகழ்ந்து வருகிறார். மேலும், சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர், தனக்கு வரும் பட வாய்ப்புகளை தடுக்க பார்ப்பதாக ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். அந்த நடிகரின் பெயரை குறிப்பிடாத அவர், அந்த நடிகர் தெலுங்கு ஹீரோக்களுக்கு அதிகம் நெருக்கமானவர், என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக ரசிகர்களை நம்பி இங்கு வந்திருக்கும் தனக்கு அந்த நடிகர் தொல்லை தருவதாக கூறிய அவர், இந்த உலகத்தில் நான் வாழ்வதா வேண்டாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...