சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க நடிகர் சங்கம் சார்பில், மன அழுத்தத்தில் இருக்கும் நடிகர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் குழு ஒன்றும் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், பிரபல நடிகை ரியாமிகா சென்னையில் வரது வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’எக்ஸ் வீடியோஸ்’, ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் ரியாமிகா, சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். பெங்களூரை சேர்ந்த இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் தங்கி சினிமாவில் நடித்து வந்த நிலையில், இன்று அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்போது ரியாமிகாவுக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...