சின்னத்திரை தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் விஜே ரம்யா. இவர் விவாகரத்துக்குப் பிறகு பளு தூக்கும் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்ததோடு, பல பதக்கங்களையும் வென்றவர், தற்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
முன்பு போல நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை குறைத்துக் கொண்ட ரம்யா, தற்போது நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், குடும்ப பாங்கான உடைகளை அணிந்து வந்த ரம்யா, தற்போது கவர்ச்சியான உடைகள் அணிய தொடங்கியதோடு, தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட தொடங்கியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய கவர்ச்சியான புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெற்றி மாறன் தயாரிப்பில், சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் ‘சங்கத்தலைவன்’ படத்தில் ரம்யா ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது...
ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்...