தமிழ் சினிமாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஜி.எஸ்.டி யை உடைத்தெரிந்த முதல் படம் என்றால் அது ‘மீசையை முறுக்கு’ தான். படம் வெளியாகி, மிகப்பெரிய ஓபனிங் பெற்றதோடு, தமிழகம் முழுவதும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி இப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது.
இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொல்நுட்ப கலைஞர்கள் பெரும்பாலானோர் புதுமுகங்கள் என்றாலுலும், அவர்களது பணி அனுபவசாலிகளாக காட்டியது.
தற்போது ‘மீசையை முறுக்கு’ படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், ஹீரோயினாக நடித்த ஆத்மிகாவுக்கும் பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதாம். இருந்தாலும், கதை தேர்வில் கவனம் செலுத்தி வருபவர், தற்போது ‘துருவங்கள் 16’ இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதில் அரவிந்த்சாமி தான் ஹீரோ. மேலும், சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
‘நரகாசூரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் கவுதம் மேனனின் ஒண்ராகா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் டோ0ஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைக்கிறார்.
வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி ஊட்டில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்களுக்கு ஊட்டியிலேயே நடைபெற இருக்கிறது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...