ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமான முறையில் ‘2.0’ படம் உருவாகியுள்ளது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்திருப்பதால், படத்திற்கு இந்திய அளவில் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மூலமாகவும் படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று ‘2.0’ படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கே சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் சிறப்பு காட்சிகள் போடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், 2.0 படத்திற்கு எதிராக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 2.0 படத்தில் செல்போன்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறியிருக்கும் இந்திய செல்போன் ஆபரேட்டர்கள் சங்கத்தினர், படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று மத்திய தணிக்கைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
நேற்று அளிக்கப்பட்ட இந்த புகார் மனு மீது இன்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டாலும், படம் இன்று வெளியாகிவிட்டதால், படத்திற்கு எந்தவித பிரச்சினையும் வராது என்றும் கூறப்படுகிறது.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...